/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ விமான விபத்தில் இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி விமான விபத்தில் இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி
விமான விபத்தில் இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி
விமான விபத்தில் இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி
விமான விபத்தில் இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி
ADDED : ஜூன் 15, 2025 10:35 PM

சங்கராபுரம்; விமான விபத்தில் இறந்தவர்களுக்கு, சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
வள்ளலார் மன்ற தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் ராதாகிருஷ்ணன், இளைஞரணி நிர்வாகி சந்திரசேகர், வியாபாரிகள் சங்க தலைவர் சக்கரவர்த்தி, செயலாளர் குசேலன் முன்னிலை வகித்தனர். பொதுசேவை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முத்துகருப்பன் இரங்கல் தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார்.
நகர திருக்குறள் பேரவை செயலாளர் லட்சுமிபதி, விஜயகுமார், தமிழ் படைப்பாளர் சங்க தலைவர் வேலு, செயலாளர் சக்திவேல், வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவர்கள் மூர்த்தி, நெடுஞ்செழியன், ரோட்டரி கிளப் செயலாளர் சங்கர், மருந்து வணிகர் சங்க தலைவர் நாச்சியப்பன், கார்குழலி அறக்கட்டளை தலைவர் தாமோதரன், வள்ளலார் பள்ளி தலைமை ஆசிரியை குமாரி இரங்கல் உரையாற்றினர்.
விமான விபத்தில் காயமடைந்த நபர் விரைவில் நலம் பெற வேண்டியும், இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும் மெழுகுவர்த்தி ஏந்தி, ஒரு நிமிடம் மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.