Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ ஐ.டி.ஐ.,யில் சேர்க்கை மாணவர்களுக்கு அழைப்பு

ஐ.டி.ஐ.,யில் சேர்க்கை மாணவர்களுக்கு அழைப்பு

ஐ.டி.ஐ.,யில் சேர்க்கை மாணவர்களுக்கு அழைப்பு

ஐ.டி.ஐ.,யில் சேர்க்கை மாணவர்களுக்கு அழைப்பு

ADDED : மே 22, 2025 11:43 PM


Google News
கள்ளக்குறிச்சி: மாவட்டத்தில் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்த செய்திக்குறிப்பு:

கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில், 2025ஆம் ஆண்டிற்கான

மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது. இதற்கு, 8 மற்றும், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கு, www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். வரும் ஜூன்,13 கடைசி நாள்.

மாணவர்கள் மற்றும் பெற்றோர் பயன்பெறும் வகையில் விண்ணப்பித்தல் தொடர்பான அறிவுரைகள் வழங்கவும், இலவசமாக பதிவு செய்யவும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களின் முதல்வர்கள், உளுந்துார்பேட்டை-99446 18626;சங்கராபுரம்-94428 67335; சின்னசேலம் -99444 65662; ஆகிய என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us