ADDED : ஜன 08, 2025 05:46 AM
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே ஓடும் பஸ் மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னையிலிருந்து அரசு பஸ் சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்சை கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த ஜெயபால், 45; ஓட்டிச் சென்றார். நேற்று மாலை 6 மணி அளவில் உளுந்துார்பேட்டை டோல்கேட் வழியாக சென்று கொண்டிருந்தது.
பு.மாம்பாக்கம் அருகே சென்ற போது, பைக்கில் வந்த வாலிபர் அரசு பஸ்சின் பின்பக்க கண்ணாடியை கல் வீசி தாக்கினார். இதில் பஸ் கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது.
இதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயங்களின்றி தப்பினர். பின் பயணிகள் மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
டிரைவர் ஜெயபால் கொடுத்த புகாரின் பேரில் உளுந்துார்பேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.