ADDED : மார் 22, 2025 08:55 PM
மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ஏரி பாசன கால்வாய் மூடப்பட்டு நெற்பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கடுவனுாரில், நான்கு வழி சாலையாக மாற்றும் பணி நடந்து வருகிறது. ஏரிக்கரையில் சாலை அமைக்கும் போது, அங்கிருந்து வெளியேறும் உபரி நீர் கால்வாயை மூடியதால், ஏரி பாசனத்தை நம்பி விவசாயம் செய்து வரும் விவசாயிகள் பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர்.
தண்ணீர் இல்லாமல் நெற்பயிர்கள் கருகி வருகின்றன. ஏரியின் உபரி நீரை திறந்து விட, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.