/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ அரசு மருத்துவமனையில் லஞ்சம் வீடியோ வைரல் அரசு மருத்துவமனையில் லஞ்சம் வீடியோ வைரல்
அரசு மருத்துவமனையில் லஞ்சம் வீடியோ வைரல்
அரசு மருத்துவமனையில் லஞ்சம் வீடியோ வைரல்
அரசு மருத்துவமனையில் லஞ்சம் வீடியோ வைரல்
ADDED : ஜூன் 30, 2025 03:27 AM
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அரசு மருத்துவமனையில் நோயாளியின் உறவினரிடம், தற்காலிக பெண் பணியாளர் லஞ்சம் கேட்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
திருக்கோவிலுார் அரசு மருத்துவமனையில் பிரசவித்த பெண்ணின் உறவினரிடம், சுகாதார தூய்மை பெண் பணியாளர் ஒருவர், 1500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.
அந்த வீடியோவில் பெண் பணியாளர் கூறியதாவது:
நாங்க வாங்குற 15,000 ரூபாய் சம்பளத்துக்கு கூலி வேலைக்கு போனா கூட யாருக்கும் கை கட்டி பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
ரத்தக்கரை படிந்த துணிகளை துவைப்பதற்குள் மயக்கமே வந்து விடுகிறது. அரசு ஒரு பொருளை கொடுத்தால் இன்னொரு பொருளை கொடுக்காது.
இங்கு இருப்பவர்கள் பெருக்கி, துடைப்பவர்களை பிடித்து உயிரை வாங்குகிறார்கள். ஒரு தொகையை பில் போட்டு எடுத்து கொண்டு, ஜாலியாக இருக்கின்றனர். அவர்களை கேள்வி கேட்க முடியுமா?
இவ்வாறு அதில் அவர் பேசி உள்ளார்.