ADDED : பிப் 06, 2024 05:39 AM
சங்கராபுரம், : சங்கராபுரம் அருகே பிராந்தி பாட்டில் விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம் அடுத்த ஊராங்காணி கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் சாராய சோதனை நடத்தினார். அப்போது அப்பகுதியில் அனுமதியின்றி பிராந்தி விற்ற மாயவன், 57; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 8 பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சூதாடிய 4 பேர் கைது
வடசிறுவள்ளுர் அய்யனார் கோவில் அருகே சப் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் ரோந்து சென்றார். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய குமார், 40; ராஜேந்திரன், 40; ராஜ்குமார், 28; செல்வம், 50; ஆகிய 4 பேரை கைது செய்தனர்.