ADDED : பிப் 11, 2024 03:27 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் அரசின் புத்தக கண்காட்சி துவக்க விழா நடந்தது.
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. பள்ளி மைதானத்தில், அரசின் 2ம் ஆண்டு புத்தக கண்காட்சியை நேற்று அமைச்சர் வேலு தலைமை தாங்கி துவக்கி வைத்தார். கலெக்டர் ஷ்ரவன்குமார், விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார், எம்.எல்.ஏ.,க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் முன்னிலை வகித்தனர்.
புத்தகக் கண்காட்சி வரும் 19ம் தேதி வரை காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடக்கிறது. இக்கண்காட்சியில் 100க்கும் மேற்பட்ட புத்தக பதிப்பக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள், சமூக ஆர்வலர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பயனடையும்படி அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், மாவட்ட நூலக அலுவலர் காசிம், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.