/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லுாரியில் ரத்த தான முகாம்திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லுாரியில் ரத்த தான முகாம்
திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லுாரியில் ரத்த தான முகாம்
திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லுாரியில் ரத்த தான முகாம்
திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லுாரியில் ரத்த தான முகாம்
ADDED : பிப் 06, 2024 11:28 PM

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லுாரி, உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனை சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.
கல்லுாரி வளாகத்தில் நடந்த முகாமில் கல்லுாரி முதல்வர் நாராயணசாமி வரவேற்றார். தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கி, முகாமைத் துவக்கி வைத்தார்.
செயலாளர் சுப்ரமணியன், பொருளாளர் ஏழுமலை, தாளாளர் பழனிராஜ், துணைத் தலைவர் முஸ்டாக் அகமது, நிர்வாக அலுவலர் குமார் வாழ்த்திப் பேசினார்.
டாக்டர் அஜய் தலைமையிலான மருத்துவக் குழுவினர் 50 மாணவ, மாணவிகளிடம் இருந்து ரத்ததானம் பெற்றனர். டாக்டர் இம்தியாஸ் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். கல்லுாரி துணை முதல்வர் மீனாட்சி நன்றி கூறினார்.