/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ பா.ஜ.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் பா.ஜ.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
பா.ஜ.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
பா.ஜ.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
பா.ஜ.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
ADDED : செப் 11, 2025 11:00 PM

கள்ளக்குறிச்சி; துணை ஜனாதிபதியாக ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதற்கு கள்ளக்குறிச்சி பா.ஜ.,வினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
நிகழ்ச்சிக்கு, நகர தலைவர் சத்யா தலைமை தாங்கினார். மாநில, மாவட்ட நிர்வாகிகள் செல்வநாயகம், தேவ சந்திரகுமார், ராஜேஷ், மகேந்திரன், தர்மசிங் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர் மாவட்ட தலைவர் பாலசுந்தரம் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியி் பா.ஜ., நிர்வாகிகள் துரை, அருண்குமார், சிவசக்தி, பிரேம்ராஜ், இளையராஜா, பகிரதன், குணா, ரவி, மதி , செல்வம், மாரியாப்பிள்ளை, முத்தையன், வெங்கடேசன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
சங்கராபுரம் சங்கராபுரம் கடை வீதி மும்முனை சந்திப்பில் கிழக்கு ஒன்றிய பா.ஜ., சார்பில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
மாவட்ட துணை தலைவர் மணிமாறன், ஒன்றிய தலைவர் மணிகண்டன், ஒன்றிய செயலாளர் ஏழுமலை, ஒன்றிய துணை செயலாளர்கள் ரமேஷ், சித்தார்த்தன், பொருளாளர் செல்வம், நிர்வாகிகள் பிரகாசம், சிவக்குமார், ஜெயவர்மா, மலையம்மாள், பிரதீப் உட்பட பலர் பங்கேற்றனர்.