/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
ADDED : ஜன 12, 2024 11:12 PM

கள்ளக்குறிச்சி,-கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் அருள் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர்கள் ராஜேஷ், தியாகராஜன் முன்னிலை வகித்தனர். செயலாளர் ஹரி வரவேற்றார். கூட்டத்தில் சிறப்பு விருந்தினர் வேலுார் கோட்ட அமைப்பு செயலாளர் குணா பேசினார்.
கூட்டத்தில், வரும் 22ம் தேதி அயோத்தியில் நடைபெறும் ராமர் கோவில் கும்பாபிேஷகத்தையொட்டி மாலை 5:00 மணிக்கு வீடுகளில் தீபம் ஏற்ற வேண்டும்.
கும்பாபிேஷக நிகழ்ச்சியை கிராமங்களிலும் கோவில்கள் முன்பு 'டிவி' மூலம் ஒளிபரப்ப வேண்டும்.
மேலும் வரும் 28ம் தேதி மனதின் குரல் நிகழ்ச்சியின் பிரதமர் மோடியின் உரையை பொதுமக்கள் அறியும் வகையில் மாவட்டத்தில் உள்ள 1,274 பூத்களிலும் ஒளிபரப்ப வேண்டும். வரும் 31ம் தேதிக்குள் புதிய வாக்காளர்கள் 1000 பேர் வரை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
மாநில செயற்குழு உறுப்பினர் பாலசுந்தரம், மாவட்ட பொருளாளர் குமரவேல், செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, பிரகாஷ், கிருஷ்ணவேணி, துணைத் தலைவர் சர்தார்சிங், சத்தியசீலன், மாநில சிறுபான்மை அணி பொருளாளர் ஸ்ரீசந்த், பட்டியல் அணி செயலாளர் பாண்டியராஜன்.
மகளிர் அணி தலைவர் அலமேலு, ஆன்மிக பிரிவு தலைவர் முருகன், உள்ளாட்சி பிரிவு தலைவர் ராஜேந்திரன், தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவர் கருணாகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
நகர தலைவர் சூரிய மகாலட்சுமி நன்றி கூறினார்.