ADDED : ஜன 29, 2024 06:30 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் பைக்கை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் மற்றும் போலீசார் நேற்று காலை 9:30 மணியளவில், கச்சிராயபாளையம் சாலையில் அம்மன் நகரில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக ராயல் என்பீல்டு பைக்கில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
அதில், குதிரைச்சந்தல் ரங்கசாமி மகன் கோபி, 34; சேகர் மகன் ஆகாஷ், 22; எனவும், அவர்கள் வந்த பைக் அதே ஊரைச் சேர்ந்த தனுஷ் என்பவருடன் சேர்ந்து கடந்த ஆண்டு திருடியதும் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து, போலீசார், பைக்கை பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்து, தனுைஷ தேடி வருகின்றனர்.