/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ சுகாதார வளாக கட்டடம் கட்ட பூமி பூஜை சுகாதார வளாக கட்டடம் கட்ட பூமி பூஜை
சுகாதார வளாக கட்டடம் கட்ட பூமி பூஜை
சுகாதார வளாக கட்டடம் கட்ட பூமி பூஜை
சுகாதார வளாக கட்டடம் கட்ட பூமி பூஜை
ADDED : செப் 05, 2025 07:43 AM
மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டு அடுத்த வட பொன்பரப்பி பகுதிக்கு தினமும் நுாற்றுக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சுகாதார வளாக கட்டடம் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பேருந்து நிறுத்தும் இடத்தின் அருகே ரூபாய் 7 லட்சத்தி 85 ஆயிரம் மதிப்பீட்டில் சமுதாய சுகாதார வளாக கட்டடம் கட்ட பூமி பூஜை போடும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவர் சிவமலை தலைமை தாங்கி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தாமரை,ஒருங்கிணைப்பாளர் சாந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.