ADDED : மார் 22, 2025 08:53 PM

சின்னசேலம், : சின்னசேலத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
சின்னசேலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து துவங்கிய பிளாஸ்டிக் ஊர்வலத்தை, பேரூராட்சி சேர்மன் லாவண்யா ஜெய்கணேஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார். பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ராஜா, பேரூராட்சி துப்புரவு ஆய்பாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி மாணவிகள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று பிளாஸ்டிக் தவிர்த்து மஞ்சள் பை பயன்படுத்துவது குறித்து துண்டு பிரசுரம் வழங்கினர்.