ADDED : மே 31, 2025 12:52 AM
மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அருகே குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த ரங்கப்பனுாரில், குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதில், ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சனா தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் குற்றங்கள், குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துதல், போதை பொருட்களை முற்றிலும் தடை செய்தல் உள்ளிட்டவைகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் மலர்கொடி, கிராம நிர்வாக உதவியாளர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் திருமால்வளவன் நன்றி கூறினார்.