Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ விழிப்புணர்வு பிரசாரம்

விழிப்புணர்வு பிரசாரம்

விழிப்புணர்வு பிரசாரம்

விழிப்புணர்வு பிரசாரம்

ADDED : ஜூன் 04, 2025 09:26 PM


Google News
Latest Tamil News
திருக்கோவிலுார்; திருக்கோவிலுாரில், மரம் நடுதல் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

சேலம் ரோட்டரி கிளப் மற்றும் எலைட் ரோட்டரி கிளப் இணைந்து மரம் நடுதல் மற்றும் மழை நீர் சேமிப்பதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்கள் ஏற்படுத்தும் வகையில் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு கார் மூலம் விழிப்புணர்வு பேரணி பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த குழுவினர் திருக்கோவிலுார் வந்ததையடுத்து, ரோட்டரி கிளப் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

சங்க தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். சாசன தலைவர் வாசன், செயலாளர் கோதம்சந்த், உறுப்பினர் காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் மரம் நடுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us