Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பொதுமக்களிடையே விழிப்புணர்வு

பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பொதுமக்களிடையே விழிப்புணர்வு

பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பொதுமக்களிடையே விழிப்புணர்வு

பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பொதுமக்களிடையே விழிப்புணர்வு

ADDED : ஜூலை 05, 2025 03:35 AM


Google News
Latest Tamil News
கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சியில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு நடவடிக்கை குறித்து போலீஸ் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

கள்ளக்குறிச்சி எஸ்.பி.,ரஜத்சதுர்வேதி உத்தரவின் பேரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி., ரமேஷ், பெண்களுக்கு எதிரான குற்ற புலனாய்வு டி.எஸ்.பி.,ஜெயக்குமார் மேற்பார்வையில், மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு, சைபர் கிரைம் மற்றும் சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு போலீஸ் சார்பில் நாட்டுப்புற கலைக் குழுவினர் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர்கள் ராபின்சன், பிரபாவதி, சப் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், அப்புதுரை, பச்சையப்பன், சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் வசந்தா, ஏட்டுகள் சித்ரா, சகாயராணி ஆகியோர் பங்கேற்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.

நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், தடுப்பு நடவடிக்கைகள், சாலை பாதுகாப்பு, போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு, சைபர் குற்ற தடுப்பு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. சைபர் கிரைம் புகார் உதவி எண் 1930 குறித்தும் விளக்கப்பட்டது.

விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us