Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/பரிசளிப்பு விழா

பரிசளிப்பு விழா

பரிசளிப்பு விழா

பரிசளிப்பு விழா

ADDED : ஜன 21, 2024 04:56 AM


Google News
Latest Tamil News
திருக்கோவிலுார்: அரகண்டநல்லுாரில், தெற்கு மாவட்ட தி.மு.க., இளைஞர் அணி சார்பில் நடந்த பொங்கல் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

பொங்கல் பண்டிகையையொட்டி, சிறுவர், பெரியவர்கள் என பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

முன்னாள் கவுன்சிலர் மொபின்கான், நகர செயலாளர் காமராஜ், துணைச் செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அன்பு தலைமை தாங்கி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.ஒன்றிய அமைப்பாளர் ஐயப்பன் நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us