/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/வெளிநாட்டில் வேலை எனக்கூறி ரூ.50 லட்சம் மோசடி செய்தவர் கைதுவெளிநாட்டில் வேலை எனக்கூறி ரூ.50 லட்சம் மோசடி செய்தவர் கைது
வெளிநாட்டில் வேலை எனக்கூறி ரூ.50 லட்சம் மோசடி செய்தவர் கைது
வெளிநாட்டில் வேலை எனக்கூறி ரூ.50 லட்சம் மோசடி செய்தவர் கைது
வெளிநாட்டில் வேலை எனக்கூறி ரூ.50 லட்சம் மோசடி செய்தவர் கைது
ADDED : பிப் 25, 2024 05:21 AM

கள்ளக்குறிச்சி, : வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக 16 பேரிடம் 50 லட்சம் ரூபாய் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம், காந்தி நகரைச் சேர்ந்தவர் கலியப்பிள்ளை மகன் தேவா, 31; பொற்படாக்குறிச்சி காட்டுகொட்டாயை சேர்ந்தவர் கோவிந்தன் மகன் ரகுபதி, 32; இருவரும் நண்பர்கள்.
கடந்தாண்டு மே 28ம் தேதி தேவாவுடன் மொபைல் போனில் தொடர்பு கொண்ட ரகுபதி, சிங்கப்பூரில் வேலை வாங்கி வருவதாக கூறினார்.
அதனை நம்பி தேவா, ரகுபதியிடம் ரூ.2.60 லட்சம் கொடுத்தார். இதேபோல், சின்னசேலம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 16 பேரிடம் ரகுபதி மொத்தம் 49 லட்சத்து 70 ஆயிரத்து 500 ரூபாய் வசூலித்தார். ஆனால், யாரையும் சிங்கப்பூருக்கு வேலைக்கு அனுப்பாமல் ஏமாற்றி வந்தார்.
இதுகுறித்து தேவா அளித்த புகாரின்பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து ரகுபதியை கைது செய்தனர்.