Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/பாராட்டு விழா

பாராட்டு விழா

பாராட்டு விழா

பாராட்டு விழா

ADDED : பிப் 11, 2024 09:55 PM


Google News
சங்கராபுரம், : சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலத்தில் பாண்டுவனேஸ்வரர் கோவில் கும்பாபிேஷகம் மற்றும் திருப்பணியை சிறப்பாக தலைமையேற்று செய்தவர்களுக்கும், நன்னீராட்டு செய்த சிவாச்சாரியார்களுக்கும் பாராட்டு விழா நடந்தது.

பரம்பரை அறங்காவலராக இருந்து செயல்பட்ட செந்தில்குமார்,அரிமா முன்னாள் தலைவர் முனுசாமி,சிவாச்சாரியார் ரவி குருக்கள் ஆகியோருக்கு சங்கராபுரம் பொது சேவை அமைப்புகளின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் முத்துக்கருப்பன்,குசேலன் ஆகியோர் பொன்னாடை அணிவித்தனர்.

இன்னர்வீல் கிளப் முன்னாள் தலைவி மஞ்சுளா, கல்யாணி முத்துக்கருப்பன், வாசவி கிளப் தீபா சுகுமார்,பிரதோஷ வழிபாட்டு அமைப்பின் செயலாளர் கணபதி, ஆகியோர் வாழ்த்தி பேசினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us