/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணிபோதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜன 10, 2024 11:22 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில், கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கலைப்பயணம் மற்றும் கல்லுாரி மாணவர்களின் பேரணியை கலெக்டர் துவக்கிவைத்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் சாராயம் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பேரணி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டு, அதன் தொடக்க விழா நேற்று நடந்தது. கலெக்டர் ஷ்ரவன்குமார் கலைப்பயணம் மற்றும் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கிவைத்தார்.
கலைக்குழுவினர் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் போதைப்பொருள் தடுப்பு மற்றும் கள்ளச்சாராயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர். தொடர்ந்து தனியார் கல்லுாரி மாணவ, மாணவிகள் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து துருகம் ரோடு வழியாக ஏ.கே.டி., பள்ளி வரை பேரணியாக சென்றனர்.
அதில், கள்ளச்சாராயம் என்பது விஷமே, குடித்தால் மரணம் என்பது நிஜமே. கம்பங்கூழ் அருந்தினால் தெம்பு, கள்ளச்சாராயம் அருந்தினால் வம்பு. கள்ளச்சாராய பிழைப்பு, காலனுக்கு அழைப்பு. கள்ளச்சாராயம் மறப்போம், உயிரையும் உடலையும் காப்போம். கள்ளச்சாராயம் போதை, காட்டுக்கு வழிகாட்டும் பாதை. உட்பட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, கோஷமிட்டு, துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.