ADDED : செப் 17, 2025 11:34 PM

சின்னசேலம்: சின்னசேலம் ஒன்றிய, நகர தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
சின்னசேலம் பஸ் நிலையம் அருகே நடந்த நிகழ்ச்சிக்கு வடக்கு ஒன்றிய செயலாளர் அன்புமணிமாறன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் அண்ணாதுரை உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. நிர்வாகிகள் ஜனார்த்தனன், செந்தில்குமார், அய்யாசாமி, குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.