/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/சாலையை கடக்க முயன்ற முதியவர் கார் மோதி பலிசாலையை கடக்க முயன்ற முதியவர் கார் மோதி பலி
சாலையை கடக்க முயன்ற முதியவர் கார் மோதி பலி
சாலையை கடக்க முயன்ற முதியவர் கார் மோதி பலி
சாலையை கடக்க முயன்ற முதியவர் கார் மோதி பலி
ADDED : ஜன 06, 2024 06:24 AM
கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அருகே சாலையை கடக்க முயன்ற முதியவர் கார் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
சேலம் மாவட்டம், கெங்கவள்ளி வட்டம், தெடாவூரை சேர்ந்தவர் சின்னதம்பி,70; பஸ் டிராவல்ஸ் தொழில் செய்து வரும் இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு 12:10 மணிக்கு அம்மையகரம் பஸ் நிறுத்தம் அருகே பஸ்சை நிறுத்திவிட்டு, அருகில் உள்ள பேக்கரியில் டீ குடிக்க சென்றார்.
டீ குடித்துவிட்டு சாலையை கடந்தபோது, அவ்வழியாக வந்த மாருதி கார் முதியவர் மீது மோதியது. இதில் முதியவர் சின்னதம்பி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.