ADDED : ஜூன் 12, 2025 12:38 AM
கள்ளக்குறிச்சி : வரஞ்சரம் அருகே மதுபாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
வரஞ்சரம் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, எஸ்.ஒகையூர் கிராமத்தை சேர்ந்த கஞ்சமலை மகன் பொன்னுசாமி, 55; என்பவர் தனது வீட்டிற்கு பின்புறம் மதுபாட்டில் விற்பனை செய்தது தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, அவரிடமிருந்த 7 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.200 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.