/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ அரகண்டநல்லுாரில் அ.தி.மு.க., திண்ணை பிரசாரம் அரகண்டநல்லுாரில் அ.தி.மு.க., திண்ணை பிரசாரம்
அரகண்டநல்லுாரில் அ.தி.மு.க., திண்ணை பிரசாரம்
அரகண்டநல்லுாரில் அ.தி.மு.க., திண்ணை பிரசாரம்
அரகண்டநல்லுாரில் அ.தி.மு.க., திண்ணை பிரசாரம்
ADDED : மார் 22, 2025 08:57 PM

திருக்கோவிலூர் : கள்ளக்குறிச்சி மாவட்ட ஜெ., பேரவை சார்பில், கடந்த கால அ.தி.மு.க., அரசின் சாதனைகளை விளக்கி அரகண்டநல்லூரில் திண்ணை பிரசாரம் நடந்தது.
பேரவை மாவட்ட செயலாளர் ஞானவேல் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ராஜ்குமார் வரவேற்றார். முகையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பழனிசாமி முன்னிலை வகித்தார். பேரவை இணைச் செயலாளர் பிரபு, இளைஞர் அணி துணைச் செயலாளர் விநாயகமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் இளங்கோவன், தனபால் ராஜ், பழனி, சேகர், சந்தோஷ் முன்னிலை வகித்தனர்.
நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி, திண்ணை பிரசாரம் மேற்கொண்டனர். நகர செயலாளர்கள் சுப்பு, ஸ்ரீதர், மாவட்ட இணை செயலாளர் சரசுரங்கநாதன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல துணை செயலாளர் உமா சங்கர், பொதுக்குழு உறுப்பினர் ஏசுபாதம், மாவட்ட வர்த்தகரணி செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பேரவை நகர செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.