Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ சிறுதானிய இயக்கத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு

சிறுதானிய இயக்கத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு

சிறுதானிய இயக்கத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு

சிறுதானிய இயக்கத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு

ADDED : மே 26, 2025 12:56 AM


Google News
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறுதானிய இயக்கத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது.

மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சத்தியமூர்த்தி செய்திக்குறிப்பு:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காரீப், ராபி பருவத்தில் சராசரியாக 15 ஆயிரம் எக்டர் பரப்பளவில் சிறுதானியங்கள் மற்றும் குறுதானியங்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது.

தமிழக அரசால் சிறுதானிய சிறப்பு மண்டலம்-1ஆக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் கள்ளக்குறிச்சி மாவட்டம் ஓர் அங்கமாகத் திகழ்கிறது.

நடப்பாண்டில் சிறுதானியங்களின் பரப்பு மற்றும் உற்பத்தியை அதிகரிக்க மாவட்டத்தில் சிறுதானிய இயக்கம் செயல்படுத்தப்பட உள்ளது.

குறுதானியங்களுக்கான சிறுதளை விநியோகம் செய்தல் இனத்தின் கீழ் ஒரு ஏக்கர் குறுதானிய விதை, அதிகபட்சமாக ஒரு சிறுதளை வீதம் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.

மாற்றுப்பயிர் சாகுபடி திட்டத்தின் மூலம் சிறுதானிய பரப்பை அதிகரிக்கும் வகையில் விதைகள், திரவ உயிர் உரங்கள், நுண்ணுாட்ட கலவை, அறுவடை மானியம் என ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 1,250 ரூபாய் அல்லது 50 சதவீத மானியத்தில் இடுபொருள்கள் வழங்கப்பட உள்ளது.

திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலமாகப் பதிவு செய்து, முன்னுரிமை அடிப்படையில் பயன் பெறலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us