/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ ரூ.4.05 கோடியில் வேளாண் மையம்: பணிகள் தீவிரம் ரூ.4.05 கோடியில் வேளாண் மையம்: பணிகள் தீவிரம்
ரூ.4.05 கோடியில் வேளாண் மையம்: பணிகள் தீவிரம்
ரூ.4.05 கோடியில் வேளாண் மையம்: பணிகள் தீவிரம்
ரூ.4.05 கோடியில் வேளாண் மையம்: பணிகள் தீவிரம்
ADDED : மே 30, 2025 11:48 PM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் ரூ.4.05 கோடி மதிப்பில் விதை சுத்திகரிப்பு மற்றும் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் கட்டுமான பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக இருக்கிறது. இங்கு நெல், மக்காச்சோளம், எள், உளுந்து, மணிலா உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
இதற்கிடையே விவசாயிகள் பயன்பாட்டிற்காக கள்ளக்குறிச்சி - கச்சிராயபாளையம் சாலையில் விதை சுத்திகரிப்பு நிலையம் இயங்கி வருகிறது. இங்குள்ள கட்டடங்கள் 40 ஆண்டுகள் பழமை வாய்ந்து என்பதால் வலுவிழந்து காணப்பட்டது.
இந்நிலையில் இந்த கட்டடத்தை அகற்றிவிட்டு அந்த இடத்தில் புதிதாக ரூ.1.05 கோடி மதிப்பில் விதை சுத்திகரிப்பு நிலையம் மற்றும் விதை சேமிப்பு கிடங்கு கட்டப்படுகிறது.
இதற்கிடையே அனைத்து வேளாண் அலுவலகங்களும் வெவ்வேறு இடங்களில் தனியார் கட்டடங்களில் இயங்கி வருகின்றன.
இதனால் விதை சுத்திகரிப்பு நிலைய வளாக பகுதியில் ரூ.3 கோடி மதிப்பில் 2 தளங்களுடன் கூடிய, புதிதாக மாவட்ட வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம், வேளாண், தோட்டக்கலை, வேளாண் வணிகம், விதை சான்று அலுவலகங்கள் உள்ளிட்ட ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் கட்டடமும் புதியதாக அமைக்கப்பட்டு வருகிறது.
இதற்கான கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த பணிகளை விரைந்து முடித்து, வேளாண்மை மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.