Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/கெடிலத்தில் அ.தி.மு.க., பொதுக்கூட்டம்

கெடிலத்தில் அ.தி.மு.க., பொதுக்கூட்டம்

கெடிலத்தில் அ.தி.மு.க., பொதுக்கூட்டம்

கெடிலத்தில் அ.தி.மு.க., பொதுக்கூட்டம்

ADDED : ஜன 28, 2024 06:17 AM


Google News
Latest Tamil News
உளுந்தூர்பேட்டை, : உளுந்தூர்பேட்டை தொகுதி கெடிலத்தில் அ.தி.மு.க., சார்பில் மொழிப்போர் வீரவணக்க நாள் பொது கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் பாக்கியராஜ் தலைமை தாங்கினார். திருநாவலூர் ஒன்றிய செயலாளர் செண்பகவேல் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் பரமாத்மா துவக்கவுரையாற்றினார்.

ஒன்றிய செயலாளர்கள் சந்திரன், மணிராஜ், ஏகாம்பரம், ராமலிங்கம், முன்னாள் ஒன்றிய சேர்மன்கள் சந்திரலேகாசெண்பகவேல், மகாலட்சுமிஏகாம்பரம், மாவட்ட மாணவரணி பார்த்திபன் முன்னிலை வகித்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு, அமைப்பு செயலாளர் சுப்பிரமணியன், எம்.எல்.ஏ., செந்தில்குமார், கூட்டுறவு சர்க்கரை ஆலை இணைய தலைவர் ராஜசேகர், மாவட்ட மகளிரணி தலைவர் அழகுவேல்பாபு ஆகியோர் சிறப்புரையாற்றினர். அவை தலைவர் பச்சையாபிள்ளை, இணை செயலாளர் சரசுரங்கன், துணை செயலாளர் உமாஜெயவேல், பொருளாளர் ராமசந்திரன், ஜெ.. பேரவை ஞானவேல், எம்.ஜி.ஆர்., மன்றம் தங்கபாண்டியன், வழக்கறிஞர் பிரிவு சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us