ADDED : செப் 14, 2025 02:48 AM

இப்பள்ளி துவங்கி 46 ஆண்டுகள் ஆகிறது. பல ஆயிரம் மாணவர்கள் படித்து நல்ல நிலையில் உள்ளனர். முன்னாள் மாணவர்களை காணும்போது, மகிழ்ச்சியாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் இப்பள்ளியை விட்டு செல்லும்போது தன் பிள்ளைகள் எங்களை வீட்டு வெகு துாரம் செல்வது போன்று மனதில் ஏதோ ஒரு மாற்றத்தை உருவாக்கிறது.
இப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஏனைய பணியாளர்கள் அனைவரின் ஒற்றுமையால், இப்பள்ளி 46 ஆண்டுகள் கடந்து சென்றது. பெற்றோர்களும் இப்பள்ளிக்கு கொடுக்கும் மரியாதை காரணமாக இப்பள்ளி மென்மேலும் வளர்ச்சி அடைந்து வருகின்றது.
ஆசிரியர்கள் சிலர் மாணவர்களின் நலனுக்காக அரும்பாடுபட்டு வருகின்றனர். இப்பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களை தன் பிள்ளைகளாகவே பார்த்து வருவதால் மாணவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக உள்ளனர். மாணவர்களும் ஆசிரியர் கூறும் நல் ஒழுக்கங்களை கற்றுக்கொண்டு பாடங்களை படித்து வருவதால்தான் ஆண்டு தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்து பள்ளிக்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.
செந்தில் தலைமை ஆசிரியர், (பொறுப்பு)