/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் ஒருவர் கைதுபணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் ஒருவர் கைது
பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் ஒருவர் கைது
பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் ஒருவர் கைது
பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் ஒருவர் கைது
ADDED : பிப் 11, 2024 03:25 AM
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த புத்திராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல், 45;, பாக்கம் புதுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம் பிரசாத், 46; இருவருக்குமிடையே பணம் கொடுக்கல், வாங்கலில் முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில், ராம் பிரசாத் அவரது தந்தை ராமநாதனும் சேர்ந்து கதிர்வேலைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
கதிர்வேல் கொடுத்த புகாரின் பேரில், ராம்பிரசாத்தை வடப்பொன்பரப்பி போலீசார் கைது செய்தனர்.