/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற கோரி கருப்பு துணி கட்டி நுாதன போராட்டம் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற கோரி கருப்பு துணி கட்டி நுாதன போராட்டம்
தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற கோரி கருப்பு துணி கட்டி நுாதன போராட்டம்
தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற கோரி கருப்பு துணி கட்டி நுாதன போராட்டம்
தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற கோரி கருப்பு துணி கட்டி நுாதன போராட்டம்
ADDED : செப் 23, 2025 09:32 PM

மூங்கில்துறைப்பட்டு,; ராவத்தநல்லுார் பள்ளிவாசல் தெருவில் தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்றக்கோரி வாயில் கருப்பு துணி கட்டிக் கொண்டு சமைக்கும் நுாதன போராட்டம் நடந்தது.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த ராவத்தநல்லுாரில் அனைத்து தெருக்களிலும் இருந்து வெளியேறும் கழிவுநீர் பள்ளிவாசல் தெருவில் தேங்கி நிற்கிறது. இதனால் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. கழிவுநீர் தேங்கி நிற்பதை தடுக்க கோரி அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் நேற்று காலை 11:00 மணிக்கு பள்ளி வாசல் அருகே தேங்கி நிற்கும் கழிவுநீர் கால்வாய் அருகே அப்பகுதி மக்கள் வாயில் கருப்பு துணி கட்டி கொண்டு சமையல் செய்யும் நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடபொன்பரப்பி வட்டார வளர்ச்சி அலுவலர் ராதாகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன், சப்இன்ஸ்பெக்டர் ஏழுமலை போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். கழிவுநீர் தேங்காமல் செல்ல வழி ஏற்படுத்தி கொடுப்பதாக உறுதி அளித்தனர். அதனைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.