/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ குரூப்-1 தேர்வு 874 பேர் ஆப்சென்ட் குரூப்-1 தேர்வு 874 பேர் ஆப்சென்ட்
குரூப்-1 தேர்வு 874 பேர் ஆப்சென்ட்
குரூப்-1 தேர்வு 874 பேர் ஆப்சென்ட்
குரூப்-1 தேர்வு 874 பேர் ஆப்சென்ட்
ADDED : ஜூன் 15, 2025 10:34 PM
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் நடந்த குரூப் 1 தேர்வில் 874 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.
தமிழ்நாடு முழுதும் டி.என்.பி.எஸ்.சி., ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 1 (தொகுதி 1 மற்றும் தொகுதி 1ஏ) பதவிகளுக்கான முதல் நிலை தேர்வு நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பொறியியல் கல்லுாரி, ஏ.கே.டி., பாலிடெக்னிக், ஏ.கே.டி., மெட்ரிகுலேஷன் பள்ளி, தச்சூர் பாரதி கல்லுாரி, இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ் கல்லுாரி மற்றும் கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி பள்ளி என மாவட்டம் முழுதும் 13 மையங்களில் தேர்வு நடந்தது.
தேர்வில் பங்கேற்க 3,785 பேருக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டிருந்தது. தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம் செய்திருந்தது. நேற்று நடந்த தேர்வில் 2,911 பேர் தேர்வில் பங்கேற்றனர். 874 பேர் தேர்வுக்கு வரவில்லை.