/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/விதிமுறை மீறல் புத்தாண்டில் 85 வாகனங்கள் மீது வழக்குவிதிமுறை மீறல் புத்தாண்டில் 85 வாகனங்கள் மீது வழக்கு
விதிமுறை மீறல் புத்தாண்டில் 85 வாகனங்கள் மீது வழக்கு
விதிமுறை மீறல் புத்தாண்டில் 85 வாகனங்கள் மீது வழக்கு
விதிமுறை மீறல் புத்தாண்டில் 85 வாகனங்கள் மீது வழக்கு
ADDED : ஜன 03, 2024 12:01 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி உட்கோட்டத்தில் புத்தாண்டு தினத்தன்று போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாதது தொடர்பாக 85 வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி காவல் உட்கோட்ட பகுதியில் நடைபெறும் வாகன விபத்து, திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு போலீசார் தினமும் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக, புத்தாண்டு தினத்தன்று மதுபோதையில் வாகனம் ஓட்டுவதால் அதிகளவு விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
இதையொட்டி கள்ளக்குறிச்சி உட்கோட்டத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் கடந்த ௩௧ம் தேதி இரவு முதல் ௧ம் தேதி காலை வரை போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அதில், உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டியது தொடர்பாக 25 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
அதேபோல், பதிவெண் சரியாக இல்லாதது தொடர்பாக-22, சைலன்சரை மாற்றியது தொடர்பாக-5, அதிவேகமாக வாகனம் ஓட்டியது தொடர்பாக-30, மதுபோதையில் வாகனம் ஓட்டிய 3 பேர் என மொத்தமாக 85 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். அதில், 10 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.