Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/பட்டபகலில் வீடு புகுந்து திருடிய 5 பெண்களுக்கு 3 மாதம் சிறை

பட்டபகலில் வீடு புகுந்து திருடிய 5 பெண்களுக்கு 3 மாதம் சிறை

பட்டபகலில் வீடு புகுந்து திருடிய 5 பெண்களுக்கு 3 மாதம் சிறை

பட்டபகலில் வீடு புகுந்து திருடிய 5 பெண்களுக்கு 3 மாதம் சிறை

ADDED : ஜன 04, 2024 03:01 AM


Google News
உளுந்துார்பேட்டை: பட்டபகலில் வீடு புகுந்து திருடிய 5 பெண்களுக்கு, மூன்று மாத சிறை தண்டனை விதித்து உளுந்துார்பேட்டை கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

உளுந்துார்பேட்டை அண்ணா நகரை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் மனைவி ஜெனிபர் தீபாஅரசி. இவரது வீட்டுக்கு கடந்த அக்டோபர் 20ம் தேதி மதியம் வந்த 5 பெண்கள் குடிக்க தண்ணீர் கேட்டனர்.

ஜெனிபர் தீபஅரசி தண்ணீர் எடுத்துவர உள்ளே சென்றதும், 5 பெண்களுக்கும் வீட்டிற்குள் நுழைந்து பீரோவில் இருந்த 2 சவரன் நகையை திருடி கொண்டு தப்பினர்.

அதனைக் கண்டு திடுக்கிட்ட ஜெனிபர் தீபாஅரசி கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, தப்பியோடி 5 பெண்களையும் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் ஈரோடை சேர்ந்த கோபால் மனைவி மீனாட்சி,30; ஜீவா மனைவி கவிதா,28; அய்யப்பன் மனைவி முத்தம்மாள்,29; சுப்புடு மனைவி மங்கம்மாள்,35; கண்ணன் மனைவி முனியம்மாள், 35; என்பது தெரிய வந்தது. அவர்களை உளுந்துார்பேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், கைது செய்யப்பட்ட 5 பேர் மீதும் உளுந்துார்பேட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்- 1ல் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் விக்னேஷ்பிரபு, வீடு புகுந்து திருடிய 5 பெண்களுக்கும் தலா மூன்று மாதம் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.500 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும், மங்கம்மாளின் 2 வயது குழந்தை அவரது பாதுகாப்பில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us