/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/பா.ஜ., கூட்டணியில் 5 தொகுதிகள் தமிழ்நாடு ஜனதா தள ஐக்கியம் முடிவுபா.ஜ., கூட்டணியில் 5 தொகுதிகள் தமிழ்நாடு ஜனதா தள ஐக்கியம் முடிவு
பா.ஜ., கூட்டணியில் 5 தொகுதிகள் தமிழ்நாடு ஜனதா தள ஐக்கியம் முடிவு
பா.ஜ., கூட்டணியில் 5 தொகுதிகள் தமிழ்நாடு ஜனதா தள ஐக்கியம் முடிவு
பா.ஜ., கூட்டணியில் 5 தொகுதிகள் தமிழ்நாடு ஜனதா தள ஐக்கியம் முடிவு
ADDED : பிப் 06, 2024 04:53 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் நடந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சி உயர்மட்ட குழு கூட்டத்தில், லோக்சபா தேர்தலில் பா.ஜ., கூட்டணியில் 5 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கள்ளக்குறிச்சியில் நடந்த கூட்டத்திற்கு, மாநில தலைவர் மணிநந்தன் தலைமை தாங்கினார். லோக்சபா குழுத்தலைவர் லட்சுமணன், தலைமை பொதுச்செயலாளர் செங்கை ஆனந்தன், பொருளாளர் ராஜகோபால் முன்னிலை வகித்தனர். மாநில துணைத் தலைவர் முருகப்பன் வரவேற்றார்.
கூட்டத்தில், பீகார் மாநில முதல்வர் நிதீஷ்குமார் ஆலோசனைபடி, லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ., கூட்டணியில் ஒற்றுமையாக செயல்படுதல், லோக்சபா தேர்தலில் குறைந்த பட்சம் 5 தொகுதி ஒதுக்க வேண்டும்.
ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்க கோரிக்கை வைப்பது, அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ., வுடன் இணைந்து தேர்தல் பிரசாரம் செய்தல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து தேர்தல் பணி தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. மாநில துணைத் தலைவர்கள் பார்த்திபன், ராமமூர்த்தி, தங்கவேல், பொதுச்செயலாளர் சூரியமூர்த்தி உட்பட மாநில மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.