/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/மாற்றுத்திறனாளிகள் 1,000 பேருக்கு ரூ.4.5 கோடி நலத்திட்ட உதவிமாற்றுத்திறனாளிகள் 1,000 பேருக்கு ரூ.4.5 கோடி நலத்திட்ட உதவி
மாற்றுத்திறனாளிகள் 1,000 பேருக்கு ரூ.4.5 கோடி நலத்திட்ட உதவி
மாற்றுத்திறனாளிகள் 1,000 பேருக்கு ரூ.4.5 கோடி நலத்திட்ட உதவி
மாற்றுத்திறனாளிகள் 1,000 பேருக்கு ரூ.4.5 கோடி நலத்திட்ட உதவி
ADDED : பிப் 11, 2024 03:24 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது.
கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.,க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், மணிக்கண்ணன் முன்னிலை வகித்தனர். டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர் அமைச்சர் வேலு, மாற்றுத்திறனாளி பயணாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் 380, பிரத்யேக செயலியுடன் கூடிய மொபைல் 200, பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி 10, நியோ மோசன் பேட்டரி வண்டி 10, மாதாந்திர உதவித்தொகை 50 பேர் என மொத்தம் 1,000 பேருக்கு 4 கோடியே 53 லட்சத்து 100 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சமூக பாதுகாப்பு திட்டம் தனித்துணை ஆட்சியர் ராஜலட்சுமி, ஆர்.டி.ஓ., கண்ணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சுப்ரமணி, மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், துணைச் சேர்மன் தங்கம்.
நகரமன்ற தலைவர்கள் கள்ளக்குறிச்சி சுப்ராயலு, உளுந்துார்பேட்டை திருநாவுக்கரசு, ஒன்றிய சேர்மன்கள் கள்ளக்குறிச்சி அலமேலு ஆறுமுகம், திருக்கோவிலுார் அஞ்சலாட்சி அரசகுமார், ரிஷிவந்தியம் வடிவுகரசி சாமி சுப்ரமணியன்.
துணைச் சேர்மன் சென்னம்மாள் அண்ணாதுரை, உளுந்துார்பேட்டை ராஜவேல், திருநாவலுார் சாந்தி இளங்கோவன், தியாகதுருகம் தாமோதரன், சின்னசேலம் சத்தியமூர்த்தி, தியாகதுருகம் பேரூராட்சி தலைவர் வீராசாமி மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.