ADDED : மே 15, 2025 02:44 AM
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் கார் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், 3 பேர் காயம் அடைந்தனர்.
திருவண்ணாமலை, ஆரணி தாலுகா, பகஷ் நகரை சேர்ந்தவர் கரீம் பாஷா, 33; லாரி டிரைவர்.
இவர் மதுரையில் இருந்து லாரியில் இயற்கை உரம் ஏற்றிக் கொண்டு ராணிப்பேட்டைக்கு சென்று கொண்டிருந்தார்.
நேற்று காலை 8:30 மணிக்கு திருக்கோவிலுார், சந்தப்பேட்டை புறவழிச்சாலையில் சென்ற போது, எதிரில் வந்த கார், லாரி மீது மோதியது.
இதில் கரீம் பாட்ஷா, காரை ஓட்டி வந்த திருவண்ணாமலை, வேங்கிகாலை சேர்ந்த சுதாகர், 45; மற்றும் காரில் பயணம் செய்த அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் ஆகியோர் காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள், அவர்களை மீட்டு திருக்கோவிலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து லாரி டிரைவர் கரீம் பாஷா கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.