/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.22.60 லட்சம் வர்த்தகம்கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.22.60 லட்சம் வர்த்தகம்
கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.22.60 லட்சம் வர்த்தகம்
கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.22.60 லட்சம் வர்த்தகம்
கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.22.60 லட்சம் வர்த்தகம்
ADDED : ஜன 03, 2024 12:00 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் ரூ.22.60 லட்சம் வர்த்தகம் நடந்தது.
கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டிக்கு கொண்டு வருகின்றனர். அதன்படி நேற்று 630 மூட்டை மக்காச்சோளம், 85 மூட்டை உளுந்து, 15 மூட்டை மணிலா, 10 மூட்டை எச்.பி., கம்பு, 4 மூட்டை நாட்டு கம்பு, 3 மூட்டை வரகு, தலா ஒரு மூட்டை எள், தேங்காய் என 85 விவசாயிகள் 749 மூட்டை விளைபொருட்களை கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டிக்கு கொண்டு வந்தனர். சராசரியாக, ஒரு மூட்டை மக்காச்சோளம் ரூ.2,143, உளுந்து 9,215, மணிலா 7,790, எச்.பி., கம்பு 2,854, நாட்டு கம்பு 6,500, வரகு 3,200, எள் 11,299, தேங்காய் 5,215 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. கமிட்டியில் மொத்தமாக ரூ.22 லட்சத்து 60 ஆயிரத்து 800க்கு நேற்று வர்த்தகம் நடந்தது.
சின்னசேலம்
சின்னசேலம் மார்க்கெட் கமிட்டியில் 18 விவசாயிகள் 312 மூட்டை மக்காச்சோளம், ஒரு விவசாயி 2 மூட்டை உளுந்து என மொத்தமாக 312 மூட்டை விளைபொருட்களை விற்பனைக்காக கொண்டு வந்தனர். சராசரியாக ஒரு மூட்டை மக்காச்சோளம் 2,219, உளுந்து 8,703 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தமாக 7 லட்சத்து 13 ஆயிரத்து 157க்கு வர்த்தகம் நடந்தது.
தியாகதுருகம்
தியாகதுருகம் மார்க்கெட் கமிட்டியில் 15 விவசாயிகள் 168 மூட்டை விளைபொருட்களை கொண்டு வந்தனர்.
161 மூட்டை நெல், 5 மூட்டை உளுந்து, 2 மூட்டை கம்பு உள்ளிட்ட விளைபொருட்கள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன.
சராசரியாக ஒரு மூட்டை நெல் ரூ.2,769, உளுந்து 9,452, கம்பு 6,389 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது.
மொத்தமாக ரூ.3 லட்சத்து 77 ஆயிரத்து 793க்கு நேற்று வர்த்தகம் நடந்தது.