/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ அரசு பஸ்சில் 20 கிலோ கஞ்சா கடத்தல் : 3 பேரிடம் விசாரணை அரசு பஸ்சில் 20 கிலோ கஞ்சா கடத்தல் : 3 பேரிடம் விசாரணை
அரசு பஸ்சில் 20 கிலோ கஞ்சா கடத்தல் : 3 பேரிடம் விசாரணை
அரசு பஸ்சில் 20 கிலோ கஞ்சா கடத்தல் : 3 பேரிடம் விசாரணை
அரசு பஸ்சில் 20 கிலோ கஞ்சா கடத்தல் : 3 பேரிடம் விசாரணை
ADDED : செப் 25, 2025 04:31 AM
சங்கராபுரம் : சங்கராபுரத்தில் அரசு பஸ்சில் 20 கிலோ கஞ்சா கடத்தி வந்த மூவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆந்திரா மாநிலம், விஜயவாடாவில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக சங்கராபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் மற்றும் போலீசார் நேற்று பகல் 1:00 மணிக்கு சங்கராபுரம் பஸ் நிலையத்தில் ஆந்திரா மாநிலம், திருப்பதியில் இருந்து வந்த அரசு பஸ்சில் சோதனை செய்தனர்.
அப்போது சாக்கு மூட்டையுடன் இருந்த மூவரை பிடித்து விசாரித்தனர். சாக்கு மூட்டையை பிரித்து சோதனை செய்தபோது, அதில் 20 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. கஞ்சா கடத்தி வந்த மூவரை போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். போலீசாரிடம் சிக்கிய மூவரிடம், எஸ்.பி., மாதவன், திருக்கோவிலுார் டி.எஸ்.பி., பார்த்தீபன் விசாரணை நடத்தி வருகின்றனர்.