ADDED : மே 30, 2025 11:47 PM
கச்சிராயபாளையம் : கச்சிராயபாளையம் அருகே மதுபாட்டில் விற்ற, 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் சபரிமலை மற்றும் போலீசார் நேற்று முன்தினம் வடக்கனந்தல், கரடிசித்தூர் ஆகிய பகுதிகளில் ரோந்து சென்றனர்.
அப்போது வீட்டின் பின்புறமாக மது பாட்டில் விற்பனை செய்த வடக்கனந்தல் பகுதியை சேர்ந்த அஞ்சாபுளி மகன் அருள் 43; என்பவரை கைது செய்தனர்.
இதேபோல, கரடிசித்துார் கிராமத்தில் மது பாட்டில் விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த தேவராஜ் மகன் ஆனந்தராஜ் 35; என்பவரையும் கைது செய்தனர். இந்த இருவரிடமிருந்து, 25 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.