ADDED : ஜூன் 01, 2025 12:16 AM
கச்சிராயபாளையம்:கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் சபரிமலை மற்றும் போலீசார் நேற்று காலை கரடிசித்துார் மற்றும் சடையம்பட்டு பகுதிகளில் ரோந்து சென்றனர்.
அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி, 76; என்பவர் தனது வீட்டின் பின்புறம் மது பாட்டில் விற்பனை செய்தது தெரியவந்தது.
உடன், அவரிடமிருந்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். இதேபோல் சடையம்பட்டு பஸ் நிறுத்தம் அருகே பனை மரத்தடியில் மது பாட்டில் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ், 40; என்பவரிடமிருந்து 6 மது பாட்டில்களை பறிமுதல் செய்து ரமேைஷ கைது செய்தனர்.