/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ வேன் கவிழ்ந்து விபத்து உளுந்துார்பேட்டையில் 10 பேர் காயம் வேன் கவிழ்ந்து விபத்து உளுந்துார்பேட்டையில் 10 பேர் காயம்
வேன் கவிழ்ந்து விபத்து உளுந்துார்பேட்டையில் 10 பேர் காயம்
வேன் கவிழ்ந்து விபத்து உளுந்துார்பேட்டையில் 10 பேர் காயம்
வேன் கவிழ்ந்து விபத்து உளுந்துார்பேட்டையில் 10 பேர் காயம்
ADDED : செப் 01, 2025 06:26 AM
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே வேன் கவிழ்ந்து விபத்தில் விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
கடலுார் மாவட்டம் செ.குமாரபாளையம் அரசு மாதிரி பள்ளி மாணவர்கள் 20 பேர் கள்ளக்குறிச்சியில் நடந்த கபடி போட்டியில் கலந்து கொண்டனர். போட்டியை முடித்துக் கொண்டு கள்ளக்குறிச்சியில் இருந்து கடலூருக்கு வேனில் சென்று கொண்டிருந்தனர். நேற்று இரவு 8.45 மணியளவில் உளுந்தூர்பேட்டை அடுத்த எம்.எஸ்., தக்கா தேசிய நெடுஞ்சாலை சாலை வளைவு பகுதிக்கு வந்தபோது, உளுந்தூர்பேட்டையில் இருந்து வேலூர் நோக்கி சென்ற அரசு பஸ் மீது வேன் மோதி கவிழ்ந்தது. இதில் வேனில் பயணித்த தமிழரசன், 15; சந்துரு, 15; முகிலன், 14; நிதிஷ், 13; பாலச்சந்தர், 14; உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.