/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ அஞ்சலகங்களில் வங்கி கணக்கு துவங்கிட கோட்ட கண்காணிப்பாளர் வேண்டுகோள் அஞ்சலகங்களில் வங்கி கணக்கு துவங்கிட கோட்ட கண்காணிப்பாளர் வேண்டுகோள்
அஞ்சலகங்களில் வங்கி கணக்கு துவங்கிட கோட்ட கண்காணிப்பாளர் வேண்டுகோள்
அஞ்சலகங்களில் வங்கி கணக்கு துவங்கிட கோட்ட கண்காணிப்பாளர் வேண்டுகோள்
அஞ்சலகங்களில் வங்கி கணக்கு துவங்கிட கோட்ட கண்காணிப்பாளர் வேண்டுகோள்
ADDED : ஜூலை 18, 2024 04:58 AM
கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவர்கள் அஞ்சலகங்களில் வங்கி கணக்கு துவங்கி அரசின் உதவி, ஊக்கத்தொகை பெற்று பயனடையுமாறு கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
விருத்தாச்சலம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அப்துல்லத்தீப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் 3 - 12ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மத்திய, மாநில அரசு பல்வேறு உதவி மற்றும் ஊக்கத்தொகை வழங்கி வருகிறது. மாணவர்கள் உதவி, ஊக்கத்தொகை பெறுவதற்கு ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு அவசியமாகிறது.
இதற்காக, அஞ்சல் துறையும், பள்ளிக்கல்வி துறையும் இணைந்து 3 - 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அஞ்சல்துறை கணக்கும், 6 - 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அஞ்சல் துறை கீழ் இயங்கும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி கணக்கும் துவங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
எனவே, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவர்கள், தங்களது பள்ளியில் நடைபெறும் முகாமிலும், அருகில் உள்ள அஞ்சலகங்களிலும் வங்கி கணக்கை துவக்கலாம் என செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.