ADDED : ஜூலை 06, 2024 05:40 AM

மூங்கில்துறைப்பட்டு: சங்கராபுரம் அடுத்த புத்திராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி மகன் சதீஷ், 25; இவர் பொது அமைதிக்கும், சட்டம் ஒழுங்கிற்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வந்தார். இது தொடர்பாக இவர் மீது வடபொன்பரப்பி காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. தற்போது கடலுார் மத்திய சிறையில் உள்ளார்.
இவரது நடவடிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டருக்கு எஸ்.பி., ரஜத்சதுர்வேதி பரிந்துரை செய்தார். அதன்படி கலெக்டர் பிரசாந்த், சிறையில் உள்ள சதீைஷ குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து கடலுார் மத்திய சிறையில் உள்ள சதீஷிடம் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதற்கான உத்தரவு நகலை சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் வழங்கினார்.