ADDED : ஜூலை 30, 2024 11:24 PM
திருக்கோவிலுார் : உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு திருக்கோவிலுார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
தேசிய மக்கள் தொகை கல்வி திட்டத்தின் கீழ் நடந்த முகாமிற்கு, தலைமை ஆசிரியர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் கவிதா முன்னிலை வகித்தார். திருக்கோவிலுார் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் ராஜவிநாயகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மது மற்றும் புகையிலை பழக்கத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து விளக்கினார்.
நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர்கள் பாலமுருகன், வில்வபதி, சங்கரன், சந்திரசேகர், குமார் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.