ADDED : ஜூலை 07, 2024 04:28 AM
ரிஷிவந்தியம்: ஏந்தல் கிராமத்தில் மதுபாட்டில் விற்ற 4 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
பகண்டைகூட்ரோடு சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஏந்தல் கிராமத்தில் வெவ்வேறு இடங்களில் மதுபாட்டில் விற்ற, சுதாகர் மனைவி அன்னக்கிளி,40; அய்யப்பன் மனைவி அலமேலு,41; சுப்ராயன் மனைவி வீரம்மாள்,67; முருகேசன் மனைவி கோவிந்தம்மாள்,45; ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 21 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.