ADDED : மார் 12, 2025 06:50 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகில், மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி பெண் உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி அடுத்த அகரக்கோட்டாலத்தை சேர்ந்தவர் திருவேங்கடம் மனைவி பூங்கோதை,55; விவசாய கூலி தொழிலாளி. இவர் நேற்று காலை 6:15 மணியளவில் வீட்டிற்கு அருகே உள்ள குழாயில் தண்ணீர் பிடித்த போது அங்கிருந்த மின் கம்பத்தின் 'ஸ்டே வயரை' தொட்டார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.
அங்கிருந்தவர்கள் அவரை உடன் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள், பூங்கோதை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.