/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ குடிநீர் பற்றாக்குறையை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் குடிநீர் பற்றாக்குறையை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
குடிநீர் பற்றாக்குறையை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
குடிநீர் பற்றாக்குறையை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
குடிநீர் பற்றாக்குறையை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
ADDED : ஜூலை 08, 2024 05:13 AM

கள்ளக்குறிச்சி: பாண்டியங்குப்பத்தில் குடிநீர் பற்றாக்குறையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த பாண்டியங்குப்பம் கிராமத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் கடந்த சில நாட்களாக குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் அல்லாடி வருகின்றனர்.
இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலை 8:15 மணியளவில் பாண்டியங்குப்பம் - கல்லாநத்தம் சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த சின்னசேலம் போலீசார் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், உடனடியாக குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததைத் தொடர்ந்து, 8:45 மணியளவில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
அதனைத் தொடர்ந்து, ஊராட்சி நிர்வாகம் சார்பில் டேங்கர் லாரியில் தண்ணீர் கொண்டு வந்து கிராமத்தில் உள்ள குடிநீர் மினி டேங்கில் நீரேற்றம் செய்து குடியிருப்பு வாசிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது.