/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மண்புழு உரம் தயாரிக்க விவசாயிகளுக்கு பயிற்சி மண்புழு உரம் தயாரிக்க விவசாயிகளுக்கு பயிற்சி
மண்புழு உரம் தயாரிக்க விவசாயிகளுக்கு பயிற்சி
மண்புழு உரம் தயாரிக்க விவசாயிகளுக்கு பயிற்சி
மண்புழு உரம் தயாரிக்க விவசாயிகளுக்கு பயிற்சி
ADDED : ஜூலை 16, 2024 11:13 PM

ரிஷிவந்தியம், :மையனுார் கிராமத்தில் மண்புழு உரம் தயாரிப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
வாணாபுரம் அடுத்த மையனுார் கிராமத்தில் நடந்த பயிற்சிக்கு, வேளாண் உதவி இயக்குநர் சியாம்சுந்தர் தலைமை தாங்கினார்.
ஊராட்சி தலைவர் ரமேஷ், துணைத் தலைவர் ஆரோக்கியசூசைராஜ் முன்னிலை வகித்தனர். துணை வேளாண்மை அலுவலர் செந்தில்குமார் வரவேற்றார்.
மண்புழு உரம் தயாரிக்கும் தொழில்நுட்பம் குறித்தும், உயிர் உரங்கள், நுண்ணுாட்ட உரங்கள், இயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கிகள், இயற்கை பூச்சி விரட்டிகள், ரசாயண உரங்களின் பயன்பாட்டினை குறைத்தல், மண் வளம், உழவர் செயலியின் பயன்பாடுகள் குறித்து விளக்கினர்.
தொடர்ந்து, வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் மானியவிலையில் விற்பனை செய்யப்படும் பசுந்தாள் உரம் சணப்பை, நெல் மற்றும் உளுந்து விதைகள், கடப்பாறை, மண்வெட்டி, களைக்கொத்தி, அரிவாள், இரும்பு சட்டி ஆகியவற்றை வாங்கி பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டது.
வேளாண் அலுவலர் புஷ்பவள்ளி, உதவி விதை அலுவலர் சுரேஷ்குமார், உதவி வேளாண் அலுவலர் சேகர், அப்பாஸ், முகமதுநசுருல்லாகான், தொழில்நுட்ப மேலாளர் சாட்டர்ஜி உட்பட பலர் பங்கேற்றனர்.