/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ வேளாண் வளர்ச்சி குழுக்களுக்கு பயிற்சி வேளாண் வளர்ச்சி குழுக்களுக்கு பயிற்சி
வேளாண் வளர்ச்சி குழுக்களுக்கு பயிற்சி
வேளாண் வளர்ச்சி குழுக்களுக்கு பயிற்சி
வேளாண் வளர்ச்சி குழுக்களுக்கு பயிற்சி
ADDED : ஜூலை 04, 2024 03:15 AM
கள்ளக்குறிச்சி : ஜா.சித்தாமூர் கிராமத்தில் ஆத்மா திட்டத்தின்கீழ் கிராம வேளாண் வளர்ச்சி குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
ஜா.சித்தாமூர் ஊராட்சி தலைவர் ராஜாத்தி பொன்னிகண்ணு தலைமை தாங்கினார்.
வேளாண் உதவி இயக்குனர் கிருஷ்ணகுமாரி தமிழக அரசின் மண்ணுயிர் காத்து, மன்னுயிர் காப்போம் திட்டம் குறித்து விளக்கினார்.
துணை வேளாண் அலுவலர் சிவனேசன், பசுந்தாள் வரத்தின் தன்மைகள், விதைப்பின் முக்கியத்துவம், உழவன் செயலி, தமிழ் மண்வளம் மற்றும் மண் மாதிரியின் முக்கியத்துவம் குறித்து ஆலோசனை வழங்கினார்.
உதவி வேளாண் அலுவல் ஞானவேல், வேளாண் துறை சார்ந்த மானிய திட்டங்கள் குறித்து பேசினார்.
பயிற்சியை ஆத்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் மணிமேகலை, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் செல்லன், பிரகலாதன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.