/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ செயற்கை உரங்கள் உபயோகத்தை குறைக்க பயிற்சி முகாம் செயற்கை உரங்கள் உபயோகத்தை குறைக்க பயிற்சி முகாம்
செயற்கை உரங்கள் உபயோகத்தை குறைக்க பயிற்சி முகாம்
செயற்கை உரங்கள் உபயோகத்தை குறைக்க பயிற்சி முகாம்
செயற்கை உரங்கள் உபயோகத்தை குறைக்க பயிற்சி முகாம்
ADDED : ஜூலை 18, 2024 05:58 AM

கள்ளக்குறிச்சி : ஒருங்கிணைந்த உர மேலாண்மை மூலம் செயற்கை உரங்களின் உபயோகத்தினை குறைப்பது தொடர்பான பயிற்சி முகாம் நடந்தது.
திருக்கோவிலுார் வேளாண்மை துறை அட்மா திட்டத்தின் மூலம் முலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் ஒருங்கிணைந்த முறையில் உர மேலாண்மை மூலம் செயற்கை உரங்களின் உபயோகத்தினை குறைத்தல் தொடர்பான பயிற்சி நடந்தது.
மேலதாழனுார் கிராமத்தில் நடந்த பயிற்சி முகாமிற்கு வேளாண்மை துணை இயக்குனர் பெரியசாமி தலைமை தாங்கி பேசினார். வேளாண்மை உதவி இயக்குனர்(பொ) கிருஷ்ணகுமாரி மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் மைக்கல், வட்டார தொழில்நுட்ப மேலாளர் மணிமேகலை, உதவி தொழில் மேலாளர்கள் செல்லன், பிரகலாதன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.
இதில் பயிர்களுக்கான உர மேலாண்மை, பசுந்தாள் உரங்கள், பயிர் உரங்கள், இயற்கை பயிர் வளர்ச்சி மற்றும் வேப்பம் புண்ணாக்கு பயன்பாடுகள் குறித்து விவசாயிகளிடம் எடுத்துரைத்தனர்.
மேலும் வேளான் மானியத்திட்டங்கள், மண் மாதிரி எடுத்தல், தமிழ் மண்வளம், அட்மா திட்டபணிகள், உழவன் செயலி பயன்பாடு மற்றும் பதிவிறக்கம் குறித்து எடுத்துரைத்தனர்.